இலங்கைசெய்திகள்

வவுனியா மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 885 பேருக்கு கொரோனா தொற்று – 5 பேர் மரணம்!!

covid19

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 885 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் இனங்காணப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரை கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 885 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 5 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

தேவையற்ற விதத்தில் வீட்டில் இருந்து வெளியில் வருவதனை இயன்றளவு தவிர்க்கும் போது நோய் பரம்பலை கட்டுப்படுத்த முடியும். இதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button