இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!!

Vegetables

தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தட்டுப்பாடு காரணமாகவும் உற்பத்தியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தமையினாலும் மரக்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய மலையகத்தில் விளையும் மரக்கறிகளான பீன்ஸ் கிலோ ஒன்று 700 ரூபாவிலிருந்து 760 ரூபாவாகவும், பீட்ரூட் 400 லிருந்து 460 ரூபாவாகவும், தக்காளி 700 லிருந்து 800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

கத்தரிக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல மரக்கறிகளின் சில்லறை விலையும் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button