சுற்றாடல் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு நெகிழிப் பொருட்களைச் சேமிப்பதற்கான கூடைகள் வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
வடலிகளின் அனுசரணையில் நெல்லியடி சதுரங்கக் கழகத்தின் ஏற்பாட்டில் (NCC) சுற்றாடல் கண்காணிப்பின் பேண்தகு அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஊடாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பங்குபற்றுதலுடன் பிளாஸ்ரிக் பொருட்களின் பரிகரிப்பு மற்றும் மீள்சுழற்சி தொடர்பான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சுற்றாடலைப் பாதுகாக்கும் அறிவையும், மனப்பாங்கையும் ஏற்படுத்தி சூழல் பாதுகாப்பிற்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வதற்கான முதற்படியாக குஞ்சர்கடைச் சந்தி, வதிரிச் சந்தி,நெல்லியடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை,வடமராட்சி கல்வி வலயம் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் கூடைகள் வைக்கப்பட்டது.
இளையோரின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
தகவல் – கிஷோர்