இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

schools

பட்டினியாக பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போஷாக்கு வேலைத்திட்டமும் தற்போது நின்று போயுள்ளதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுஜீவ விமலரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் மற்றும் காலணிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் ,பாடசாலை சீருடைகளின் விலைகளும் 200 வீதமாக அதிகரித்துள்ளது.

இவற்றுடன் உணவுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு வருகை தருகின்றனர். இதனால் சில மாணவர்கள் காலையில் பாடசாலையில் நடக்கும் கூட்டத்தின் போது மயங்கி விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்னர் காலையில் உணவு சாப்பிடாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஒரு வகுப்பில் சுமார் நான்கு பேர் வரை இருந்தனர்.

தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோரால் பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button