ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு இலங்கையின் பாராளுமன்றம் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
போதிய இடவசதி இன்மையால், காலி முகத்திடலில் அமைந்திருந்த நாடாளுமன்றக் கட்டடம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பகுதிக்கு மாற்றப்பட்டது. 1982 ஏப்ரல் 29ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பகுதியில் அமைக்கப்பட்ட புதிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் வழிகாட்டிலின் கீழ், இந்த நாடாளுமன்றம் அமைக்கும் பணிக்கு ஜெஃப்ரி பாவா பிரதான கட்டடக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டார். புதிய கட்டடத்தை அமைப்பதற்கான பணிகளை ஜப்பானிய நிறுவனமொன்று பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.