உலக பணக்காரராக எலோன் மஸ்க் 43 பில்லியன் டொலர்களுக்கு ருவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ள நிலையில்,
ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதை விட பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையை வாங்கலாம் என ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குணால் பாஹ்ல், டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கிடம் பரிந்துரைத்துள்ளார்.
ருவிற்றர் பயனாளர்கள் சிலரும் இவ்வாறு கருத்து தெரிவித்ததாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியுள்ளது.