காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் போராட்டக்காரர்களால் புதிய கிராமமொன்று ‘கோட்டாகோகம’ என்ற பெயருடன் உருவாக்கப்பட்டது.
இப்பகுதியில் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவோடு கலந்துரையாடலை மேற்கொள்ளவென பிரத்தியேக இடமொன்றை உருவாக்கி வைத்துள்ளதுடன், இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.