இலங்கைசெய்திகள்

அமைச்சுப்பதவியை இராஜினமா செய்த அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனத்தை மீள கையளிக்கவில்லை

நாட்டில் இடம்பெற்றுவருகின்ற பொருளாதார பிரச்சனைகள் காரணமாக மக்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அனைவரும் இராஜினமா செய்திருந்தனர்.

எனினும், நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை கொண்டு நடத்தும் முகமாக ஜனாதிபதியால் சில அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சுப் பதவியை இராஜினமா செய்த அமைச்ச்ரகள் அமைச்சின் உத்தியோகபூர்வ வாகனங்களை மீள இன்னும் கையளிக்கவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button