இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் எனத் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எவ்வித மதிப்பீடும் செய்யாமல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியமையும் மனித உரிமை மீறல் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இன்று(03) கலந்துகொண்ட விசேட சந்திப்பில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க இக்கருத்தினைக் கூறியுள்ளார்.