பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய பன்னாட்டு அமைப்பு பிம்ஸ்டெக் என அழைக்கப்படுகின்றது.
அதன்படி கொழும்பில் இன்று பிம்ஸ்டெக் எனப்படும்’ பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி 5 ஆவது பிம்ஸ்டெக் மாநாடு இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழிநுட்ப, பொருளாதார ஒத்துழைப்பைஏற்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.
இதனிடையே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பங்களாதேஷ் பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில் மியான்மரின் வெளியுறவு அமைச்சர் மியான்மர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.