{கொ – 1}
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாஷை ஆவணக் கடிதத்தை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இன்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது.
கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் வே. இராதாகிருஷ்ணன், உதயகுமார் எம்பி, கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ.சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்தியத் தரப்பில் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.