செய்திகள்புலச்செய்திகள்

லண்டனில் தொடரும் கத்திக்குத்துச் சம்பவங்கள்!!

london

லண்டனில் பல கத்திக் குத்துச் சம்வங்கள் ஒவ்வொரு நாளும் இடம்பெற்று வருகிறது. கடந்த வாரம் சவுத் ஹால் பகுதியில், டீன் ஏஜ் இளைஞரான, ரிஷிமீட் சிங் என்னும் நபர் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணித்துள்ளார். இவரோடு சேர்த்து கடந்த 11 மாதங்களில், மொத்தம் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் அனைவருமே 13 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட டீன் ஏஜ் இளைஞர்கள் ஆவர். லண்டனில் கத்திக் குத்து கலாச்சாரம் முன் எப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது, பெரும் கவலை தரும் விடையமாக உள்ளது. சவுத் ஹாலில் பல தமிழ் இளைஞர்களின் நண்பராக இருந்தவர், இந்த ரிஷிமிட் சிங் என்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button