கவிதைமுத்தமிழ் அரங்கம்.

பாதைகள் – புலத்தூரான் கவிதை!!

poem

ஊருக்கை கரச்சலெண்டு
உலாத்தினவை கத்திறது
வேதினையாக் கிடக்கு
வேடிக்கையாவும் இருக்கு.//

ஆரையும் குறைசொல்லி
ஆகிறது ஒண்டுமில்லை
அவையள் யோசிச்சா
ஆகாதது ஒண்டுமில்லை.//

பத்தை செத்தையெல்லாம்
பயிருகளா வைச்சதெல்லாம்
சுத்தமா மறந்தாச்சு
சோம்பேறியா போயுமாச்சு.//

வளவுக்கை அப்ப
வகைவகையா பயிருகள்
சுரைக்கொடி பூசணி தூரவா முருங்கையும்
சுத்திவர பலதுமாய் வைச்சவையள்.//

வத்தகை வெள்ளரி
வல்லாரை பொன்னாங்காணி
கற்பூரவள்ளி கருசலாங்கண்ணி
கவனமா வைச்சவையள்.//

தோடை மாதாளை
தேசிக்கண்டு செவ்விளனி
அதோடை கொய்யா
அவ்வளவும் விடுகள்ளை.//

பிலா பல இனத்திலை
பெரிய இன மாதாளை
பப்பாசியோடை
பலதுமாக வளத்தவையள்.//

கறுத்தக் கொழும்பான்
வெள்ளைக் கொழும்பான்
விலாட்டு வெதும்பி பிலா
வீடுகள்ளை காய்க்கும்.//

வயலுக்கை நெல்லும்
வத்தாத கிணத்தாலை தோட்டமும்
அயலவை கூடித்தான்
அவ்வளவும் செய்தவையள்.//

வெங்காயம் பொயிலை
விடாமை மிளகாயும்
கறணை தக்காளி உறுளைக்கிழங்கு
காசுப் பயிராச் செய்தவையள்.//

மாட்டு வண்டில்லை
மச்சான் அண்ணன் தம்பி
கூட்டமாச் சந்தைக்கு
கொண்டுபோய் வித்தவையள்.//

கொழும்புக்கும் அனுப்பிச்சினம்
கூடின காசு உழைச்சினம்
நகை நட்டு வாங்கிச்சினம்
நல்லதெல்லாம் செஞ்சினம்.//

கடன்தண்ணி இல்லை
கலியாணமும் சொந்தத்துக்கை
வெளிநாட்டு பிள்ளையள்
வீடெல்லாம் அனுப்பிச்சினம்.//

அநியாயம் தாங்காமை
அயல்நாடு வந்ததாலை
அயலுகளும் தலைகீழா
ஆகித்தான் போச்சுதிப்ப.//

கலோ எண்டா காசு
கண்டபடி செலவு
விலைவாசி பாக்கயில்லை
வேண்ட இப்ப சாமானில்லை.//

இனியாவது யோசிப்பம்
இப்பிடியே இருக்கேலாது
சரியான பாதையிலை
கெதியாகப் போங்கோ..///

நன்றி அன்போடு புலத்தூரான்

Related Articles

Leave a Reply

Back to top button