இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்று பாடசாலைகள் மீள ஆரம்பம்!!

schools start

சகல பாடசாலைகளும் இன்றைய தினம் இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக மீளத் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் மீள திறக்கப்படும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்களின் சுகாதார நலன் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்த வேண்டும் என சிறுவர் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரோரா வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்படவுள்ளனர்.

அத்துடன், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button