இலங்கைசெய்திகள்

கலாபூசணம் ஏ.பீர் முகம்மது எழுதிய “எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்” நூல் வெளியீட்டு விழா!!

Book Launching Ceremony

ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் ஏ.பீர் முகம்மது எழுதிய “எஸ்.பொன்னுத்துரை- முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்” நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், சாய்ந்தமருது கலாசார அதிகாரசபையின் தலைவருமான எம் . முகம்மது ஆசிக்கின் தலைமையில் நேற்று(27) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். மேலும் விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்சான் கலந்து கொண்டார். நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் இக்ரா யூ சத்தார் பெற்று கொண்டதுடன் சிறப்பு பிரதிகளை ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலாபூசணம் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் மற்றும் அரசியல் ஆய்வாளர் எம்.எச்.எம்.இப்றாஹிம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் பிரதி தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எச்.ஏ. பசீரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை முன்னைநாள் அதிபர் எம்.எம். றஹிம், அக்கரைப்பற்று பேஜஸ் புத்தக இல்ல நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மஷ்ஹுர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபிக்கா ஆகியோரின் கருத்துரைகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தத்தார்கள், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தத்தார்கள், பிரதேச செயலக அதிகாரிகள், சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் நிர்வாகிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Ameer mohamed

Related Articles

Leave a Reply

Back to top button