ரஷியாவுக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானம் மீதான இன்றைய வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷியா தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. சபையில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்தியாவிடம் ரஷியாவும், அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டது. இது இந்தியா – ரஷியா உறவில் நெருக்கத்தையும், இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசலையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.