கொழும்புத் துறைமுக நகரத்தை ஜனாதிபதியின் கண்கானிப்பின் கீழ் நேரடியாகக் கொண்டு வருவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை ஜனாதிபதி அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையடப்பட்டது. கொழும்பு துறைமுக நகரின் பணிகளில் இருந்து மிக சிறப்பான மற்றும் முறையான சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே மேற்குறித்த திட்டத்தை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துறைமுக நகர திட்ட முகாமைத்துவப் பிரிவின் நிதி சம்பந்தமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக பணிகள் என்பன ஜனாதிபதியை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் ஜனாதிபதி கடந்த 15 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.