உலகம்செய்திகள்

பிரம்மாண்ட கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தது!!

Ship fire accident

ஆயிரக்கணக்கான சொகுசு மகிழுந்துகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் (Felicity Ace) என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே நேற்று திடீரென தீப்பற்றியது.

இந்நிலையில், போர்த்துக்கீச கடற்படை மற்றும் விமானப்படை விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் கருகிய மகிழுந்துகளின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் சுமார் 3 காற்பந்து விளையாட்டு மைதானம் அளவிலான இடப்பரப்பை கொண்டதாகும்.

இதில் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யவிருந்த லம்போர்கினி, போர்ஷே, ஓடி உட்பட சுமார் 3,965 சொகுசு மகிழுந்துகள் இருந்தன.

100க்கும் மேற்பட்ட மகிழுந்துகள் டெக்சாஸில் உள்ள துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படவிருந்தன.

இந்நிலையில், கப்பலில் இருந்த சொகுசு மகிழுந்துகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button