உக்ரேன் மீது எந்த சந்தர்ப்பத்திலும் படையெடுப்பதற்கான துருப்புக்களை ரஷ்யா கொண்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, உக்ரேனில் உள்ள அமெரிக்கர்கள், எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள் மூலம் படையெடுப்புகள் ஆரம்பிக்கப்படலாம். இது, வெளியேறுவதைக் கடினமாக்குதுடன், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியா, கனடா, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா முதலான நாடுகளும், உக்ரேனில் உள்ள தமது பிரஜைகளை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.
உக்ரேன் எல்லையில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான துருப்பினரை ரஷ்யா குவித்துள்ள நிலையில், படையெடுப்புக்கான திட்டமிடல் குறித்த குற்றச்சாட்டுக்களை மொஸ்கோ தொடர்சசியாக நிராகரித்து வருகின்றது.
அத்துடன், மேற்கு நாடுகள் தவறான கருத்துக்களை பரப்புவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது