டொலர் இன்மை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1800 கொள்கலன்களை விடுவிக்க முடியாது உள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இவை தேங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி, சீனி, பருப்பு உள்ளடங்கலான அத்தியாவசிய பொருட்களும் இவற்றில் இருப்பதால் இவற்றை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு மத்தியவங்கி தலையீட வேண்டுமென அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.