இலங்கைசெய்திகள்

வவுனியாவில் நாவலர் பெருமான் நினைவுநாள் நிகழ்வு!!

Novelar Memorial Event

சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய ஆறுமுகநாவலரின் நினைவுநாள் நிகழ்வு வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று (05) அனுஸ்டிக்கபட்டது.

வவுனியா நகரசபை மற்றும் உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது நாவலரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அடிகளார் தொடர்பான சிறப்புரையினை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, சுமந்திரன், சு.காண்டீபன், உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கு.நந்தகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button