மருத்துவம்

முருங்கை இலைப்பொடியால் கிடைக்கும் நன்மைகள்!!

Drumstick leaf powder

முருங்கை காய், கீரை, பூ எல்லாவற்றிலும் மிக அதிக அளவிலான ஆன்டி- ஆக்சிடண்ட்டுகளும் இரும்புச்சத்தும் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் முருங்கை கீரை சாப்பிட யோசிப்போம். கசக்கும் என்று அதை ஒதுக்கி வைத்திவிடுவோம். ஆனால் முருங்கை இலையை பொடி செய்து அதை டீயில் கலந்து குடிப்பதால் அதிலுள்ள கசப்புத் தன்மையும் குறையும். சுவையாகவும் இருக்கும். இன்னும் கூடுதல் நன்மைகளையும் பெற முடியும். உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றவும் முடியும்.

முருங்கைக்கீரை அல்லது முருங்கைக்காய் தென்னிந்தியர்களின் பாராம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகப் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலகின் பல்வேறு நாடுகள் இப்போது தான் அதன் அருமையை உணர்ந்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நம் ஊரில் கிடைக்கும் கீரைகளைச் சாப்பிடுவதே இல்லை. குறிப்பாக முருங்கை கீரை, அரைக்கீரை போன்ற நாட்டு கீரை வகைகளை ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் பீட்சா, பர்கரை நம்மிடம் திணித்து விட்டு, நம்முடைய பாரம்பரிய முருங்கை இலையை பொடி செய்து மொரிங்கா பவுடர் என்ற பெயரில் பல நூறு ரூபாய்களுக்கு பேக் செய்து நம்மிடமே விற்கிறார்கள். உலக அளவில் ஆரோக்கியமான ஒன்றாக எல்லோராலும் தற்போது பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

​உடல் எடை குறைப்பு
முருங்கை இலையில் தயாரிக்கப்படும் டீயில் பல்வேறு அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் உள்ளுறுப்புகளில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களைக் கரைக்கப் பயன்படுகிறது. ஆன்டி ஆக்ஸிடென்டுகள் செறிந்த இந்த டீயில் பாலிபினால்கள் அதிகமாக இருக்கின்றது. முருங்கை டீக்கு எடையை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த டீயை குடிக்கும் போது கொழுப்பு சேமிக்கப்படுவதற்கு பதிலாக ஆற்றல் உற்பத்தி நடக்கிறது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு சத்தை கொண்டிருப்பதோடு ஊட்டச்சத்துக்கள் செறிந்தது. இதில் கலோரிகளின் அளவும் குறைவு.

​உயர் ரத்த அழுத்தம்
முருங்கை டீ முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி, அரைத்த பொடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் உள்ள க்வெர்சிடின் ஒரு சிறப்பு அனுகூலமாகும், இந்த பொருள் தான் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் உதவுவதாக சொல்லப்படுகிறது. கூடுதலாக இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளின் காரணமாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

​ரத்த சர்க்கரை அளவு
முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, விதை, பட்டை, வேர், பிசின், மலர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக, முருங்கை இலைகளில் க்ளோரோஜெனிக் ஆசிட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. முருங்கை இலையில் செறிந்துள்ள விட்டமின் – சி, டைப் -2 வகை நீரிழிவு நோயளிகளின் இரத்த சர்க்கரையையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

​கொழுப்பை எரிக்கும்
முருங்கைக்கீரை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால் இதய நோய்களின் ஆபத்தைக் குறைத்து இதய நோயாளிகளுக்கும் உதவுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக ஊளைச்சதையாலும் தொங்குகின்ற தொப்பையாலும் தொடைப்பகுதியில் இருக்கும் செல்லுலாய்டு கொழுப்புத் திசுக்களையும் குறைக்க உதவுகிறது.

உடல் வீக்கம்
முருங்கை இலையில் இருக்கும் அதிக அளவிலான சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜன் அழுத்தத்தை எதிர்த்து போராடி உங்கள் சருமம் மற்றும் கூந்தலின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நச்சுக்களை தடுத்து சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது.

​முருங்கை டீ போடுவது எப்படி
முருங்கை இலையை நிழலிலேயே உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டினால் நல்ல பச்சை நிறத்தில் டீ கிடைக்கும். உங்களுக்குக் கூடுதல் சுவை தேவைப்பட்டால் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் டயட்டில் இந்த டீயை சேர்த்துக் கொள்வதற்கு முன்பு ஒரு டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button