புதிய வகையிலான மிருகம் ஒன்றினை பென்சில்வேனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மீட்டெடுத்துள்ளார்.
ப்பெயார்பீல்ட் நகரத்தில் தமது வீட்டிற்கு அருகில் பாத சுவடுகளை அவதானித்த அவர் அதனை பின் தொடர்ந்து சென்ற போது, அந்த புதிய வகையான மிருகத்தை மீட்டுள்ளார்.
ஆரம்பத்தில் நாய் போன்ற மிருகமாக இருக்கலாம் என கருதிய அவர், இது குறித்து வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அந்த மிருகத்தை பார்வையிட்ட வனத்துறை அதிகாரிகள் குளிரினால், உடல் நிலை பலவீனமான நிலையில் இருந்த குறித்த மிருகத்தை அடையாளம் காணமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இப்படியான மிருகம், எதனையும் உலகில் கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும், மரபணு பரிசோதனை மூலம் எந்த மிருகத்தின் வழித்தோன்றலாக இருந்திருக்கலாம் என்பதை கண்டறியமுடியும் என வனத்துறை நிபுணர் ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.