இலங்கைசெய்திகள்

மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிணைந்த பிரவேசம் தொடர்பான செயலமர்வு!!

batticaloa

மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிணைந்த பிரவேசம் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலமர்வு ஒன்று புதன்கிழமை (19) மட்டக்களப்பு YMCA கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஊடக பயிற்றுவிப்பாளரும், ஊடகவியலாளருமான சீ. தொடாவத்த, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர், எம்.பிரதீபன், ஆய்வாளர் லஹிறு கித்தரகம உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், சுதந்திர ஊடக இயக்கமும், இணைந்து மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.
மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பான பிரவேசம் பற்றி மாவட்ட செயற்பாட்டாளர்களை பயிற்றுவிக்கும் நோக்குடன் இச் செயலமர்வு இடம்பெற்றிருந்தது.

இதில், மனித உரிமைகள் வளர்ச்சியும் தகவலுக்கான உரிமையும், மனித உரிமைகள் பற்றிய அறிக்கையிடலும் எதிர்நோக்கும் சவால்களும், மனித உரிமை மீறல் கண்காணிப்பு நடவடிக்கை போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button