ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் ஒன்றுக்கூடும் இடங்களில் தாக்குதல்களை நடத்துவது உசிதமான விடயம் அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மனித உரிமைகளை மீறும் செயல் என அவர் கூறியுள்ளார்.
அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் ஆளில்லா விமானம் மூலம் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இரண்டு இந்தியப் பிரஜைகளும் பாகிஸ்தான் பிரஜை ஒருவருமே இவ்வாறு மரணித்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு யேமனின் ஈரான் தலைமையில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.