நேற்று (12) பிற்பகல் காவல்துறை விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
காலி துறைமுக காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெவெட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகநபர் ஒருதொகை சிகரட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 13,300 வரியில்லா சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், காலி துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.