எரிவாயு நெருக்கடியுடன், சந்தையில் அதிக தேவை இருப்பதால், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் கூறுகின்றனர்.
120 முதல் 200 ரூபா வரை விற்கப்பட்ட மண் பானைகள் தற்போது 450 – 500 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் உற்பத்தி செய்யும் நான்கு வகையான அடுப்புகளுக்கும் அதிக கேள்வி நிலவுவதால், நாள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபட்டாலும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என களிமண் அடுப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பருவத்தில் தொற்றுநோயால் முடங்கிய இத்தொழில் தற்போது 30 ஆண்டுகளின் பின் அதிக லாபம் ஈட்டி வருவதாக மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.