பாகிஸ்தானுடனான சில வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத இறுதியில் அவர் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக உள்நாட்டு சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய உள்நாட்டு சீமெந்து ஒரு மூடையின் விலை ஆயிரத்து 275 ரூபாவில் இருந்து ஆயிரத்து 375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சங்ஸ்தா, மஹவெலி மெரின், டோக்கியோ மற்றும் அல்ட்ரா டெக் உள்ளிட்ட சீமெந்தின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஒரு மூடை உள்நாட்டு சீமெந்தை விடவும் 100 ரூபா அதிகரித்து ஆயிரத்து 475 ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.