இலங்கைசெய்திகள்

தாய்க்கிராம தொழில் முயற்சி செயற்திட்டம் – 4 வது உதவித்திட்டத்தை ஆரம்பித்தது கராஜ் போய்ஸ் நண்பர்கள் குழு!!

gataj boys

‘இணந்து கொடுப்பது விரைந்து பலன் தரும்’ எனபதின் நிமித்தம் தமது உதவித்திட்டங்களை செயற்படுத்தி வரும் “கராஜ் போய்ஸ் நண்பர்கள்” குழுவின் நிரந்தர வறுமை தணிப்பு தொழில் முயற்சியின் 4வது உதவித்திட்டமானது புதுக்குடியிருப்பு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட சகோதரன் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

பலசரக்கு கடை ஒன்றினை அமைத்து அவரது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தீர்மானிக்கப்பட்ட உதவிச் செயற்றிட்டத்தில் ஆரம்ப நடவடிக்கையாக இன்று காலை 10 மணியளவில் கடைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் விஜயகுமாரன் , ஓய்வுபெற்ற அதிபரும் வளர்மதி சனசமூக நிலைய செயலாளருமான ச. கிருஷ்ணன், ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தரும் தருமபுரம் மேற்கு முதியோர் சங்க செயலாளருமான வே. மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வுகள் கராஜ் போய்ஸ் குழுவின் இணைப்பாளர் திரு. இ. ஜனதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு சமூக அக்கறையுடைய பலரும் மட்டுவிலில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது சமூக அக்கறையின் நிமித்தம் வரிசைப்படுத்தப்பட்ட தொடர் உதவிகளை வழங்கிவரும் எடுத்துக்காட்டான இந்த குழுவினரின் செயற்பாடுகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Related Articles

Leave a Reply

Back to top button