உலகம்செய்திகள்

முதல் ஒமைக்ரொன் தொற்றாளர் ஈரானில் அடையாளம்!!

Omicron

ஒமைக்ரொன் கொரோனா வைரஸ் திரிபுடன் ஈரானில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அத்துடன் ஒமைக்ரோன் திரிபு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானில் கொவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைவதோடு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைவதாக அறிவிக்கப்பட்டு சில நாட்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஈரானின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் அவர்களில் பலர் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுமாறு ஈரான் சுகாதார அமைச்சு அந்நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button