பெண் நண்பியை அச்சுறுத்த முயன்ற இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு அண்மையில் நடந்துள்ளது.புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் என்ற 31 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் வாடகை அறையில் தங்கிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இராமநாதன் வீதியில் தான் தங்கியிருந்த அறையில் கதிரை ஒன்றின் மீது ஏறி நின்று கழுத்தில் கயிற்றை மாட்டியதுடன் அதை கைபேசி நேரலையில் பெண் நண்பிக்கு காண்பித்து மிரட்டியுள்ளார் என்று தெரியவருகின்றது.
அப்போது கதிரை சரிந்ததில் அவர் கயிற்றில் தொங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.