அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர் கிராமம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை (11), நீதிமன்ற வீதி, ரெஸ்ட் ஹவுஸ் வீதி, வீட்டுத்திட்டம் குறுந்தயடி, பாலமுனை , அட்டாளைச்சேனை, ஒலுவில் வீட்டுத்திட்டம், ஹிச்ரா பிரதான வீதி அம்பாறை வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.