
யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களினால் மாவீரர் தினத்தையொட்டி மரபுரீதியாக 6.05 மணிக்கு ஏற்படுகின்ற ஈகைச்சுடர் இன்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
மாவீரர் தூபியில் தீபம் ஏற்றப்பட்டதோடு உயிரிழந்த வீர மறவர்களுக்கு முழந்தாளிட்டு மாணவர்களால் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் பொலிசாரும் குவிக்கப்பட்டு வழமையை விட கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் மாணவர்கள் மாவீரர் தினத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை இன்று காலை பல்கலைக்கழக வேலை நாளாக இருந்தாலும் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக கதவுகளை பூட்டி, அலுவலர்களை மட்டுமே உள்ளே அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.