இலங்கைசெய்திகள்

கடல் கொந்தளிப்பு – மண்டைதீவு கடலில் படகுகள் மூழ்கின!!

Sea turbulence

யாழ்ப்பாணம் – மண்டைதீவு முனைக்கடற்பரப்பில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கியுள்ளதாகவும், தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

குருநகர் மீனவர்கள் படகுகளில் தொழிலுக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடலில் திடீரென எழுந்து சுழியில் சிக்கி இரண்டு படகுகள் கவிழ்ந்துள்ளன. அவற்றில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து தொழிலுக்குச் சென்ற ஏனைய மீன்பிடிப் படகுகள் கரைக்கு திரும்பியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button