இலங்கைசெய்திகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரன் எம்.பி கோரிக்கை

தமிழ்நாட்டில் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் இன்று 17 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தாயகத்திற்கு வர விரும்பினால் அவர்களை தாயகத்திற்கும் அல்லது தமிழ்நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் அங்கு வாழ்வதற்கும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட இனப்படுகொலையில் இருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இளைஞர்கள், யுவதிகள் நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள்.

யுத்தம் காரணமாக தாயகத்தில் இருந்து வெளியேறிவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறப்பு முகாம்களுக்குள் அடைத்து மோசமான நிலையில் வைத்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையீட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button