பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவணியின் மூன்றாவது நாளான இன்று திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணி நகர்ந்து செல்கின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினமான மே – 18 முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் பேரணி நேற்று திருகோணமலையை அடைந்த நிலையில், இன்று காலை திருகோணமலையில் இருந்து நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.
இப்பேரணியில், யுத்தத்தில் உறவுகளை இழந்த உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், அரசியல் வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்னும் தொனிப்பொருளில் இப்பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.