நாட்டின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 2.8 சதவீதத்தினால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் பணவீக்கமானது 14 சதவீதமாக காணப்பட்டது.
ஆயினும், 2022 ஜனவரி மாதம் 2.8 சதவீதத்தால் அதிகரித்து 16.8 சதவீதமாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.