இலங்கைசமீபத்திய செய்திகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு டலசுக்கு கரம் கொடுக்கின்றது

முழுநாடுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாளை (20) இடம்பெறவுள்ள ஜனாதிபதி வாக்கெடுப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்திலேயே டலஸை ஆதரிக்கும் முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் அரசியல் உயர்பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button