இலங்கைசெய்திகள்

உணவுப்பஞ்சத்தால் இந்தியாவிற்கு அகதிகளாகச் செல்லும் தமிழர்கள்

“போரால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டினிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடி க்கு வந்துள்ளோம்.” என்று வவுனியாவில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பொருட்களின் விலை அதிகரிப்பால் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள குடும்பங்கள் இந்தியாவிற்கு அகதிகளாகச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தமது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.

நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் இஞ்சின் சரி செய்து செவ்வாய்கிழமை (நேற்று) இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்தனர்.

உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button