உலகம்செய்திகள்பிரதான செய்திகள்

கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவை வரிசையில் ஒரு பெரிய மாற்றத்துடன், மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தொடர்ந்தும் முனனெடுத்துள்ளார்.

அண்மையில் கனடாவில் பொது தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக கனடாவில் ஆட்சியமைக்கின்றது.

இதன்படி, இன்றைய தினம் கனடாவில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பபடி அமைச்சரவையில் ஒன்பது புதியவர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சில முக்கிய மாற்றங்கள் மற்றும் அடுத்த மாதம் நாடாளுமன்றம் திரும்புவதற்கு முன்னதாக புதிய இலாகாக்கள் உருவாக்கம் ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த பட்டியலைவிட சற்று பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1990ம் ஆண்டுகளில் முன்னாள் பிரதம மந்திரி Kim Campbell க்குப் பிறகு, கனடாவின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அனிதா ஆனந்த் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்தவர். கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர்.

தமிழகம் – வேலூரைத் தனது பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை வைத்தியர். இவரது இயற்பெயர் சுந்தரம் விவேகானந்தன். அனிதாவின் தாயார் சரோஜ் ராம், பஞ்சாப் அமிர்தரஸைச் சேர்ந்தவராவார்.

Related Articles

Leave a Reply

Back to top button