உலகம்செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரேஸிலில் பூஸ்டர்!!

vaccine

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் அளவு செலுத்தி கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ குயிரோகா கூறுகையில், ‘விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நமக்கு கிடைத்த தகவலுக்கு நன்றி, 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் அளவு வழங்க முடிவு செய்துள்ளோம்’ என கூறினார்.

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான பிரேஸிலியர்கள் பூஸ்டர் அளவு பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது பிரேஸிலில், முன்கள பணியாளர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் அளவு செலுத்தப்பட்டு வருகின்றது.

உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் இரண்டாவது இடத்திலும் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button