தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கும், கடன் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணபதற்கும், ஆலோசணை வழங்குவதற்குமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் ஜனாபதி ஆலோசணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், முன்னாள் மத்தியவங்கி ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான இந்திரஜித் குமாரசுவாமி, ஜோர்ஜ்டவுன் பல்கழைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் சந்தா தேவராஜன் மற்றும் நிறுவனத்திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி ஷார்மினி குரே ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.