அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை அமைச்சின் செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.