கட்டுரைசெய்திகள்முக்கிய செய்திகள்

வெற்றியும் தோல்வியும்!!

Artcle

வெற்றியும் தோல்வியும் இரு வேறு பாதைகளின் இரு வேறு தரிப்பிடங்கள் என்று எம்மில் பலரும் எண்ணுகிறோம்.

வெற்றி என்பது தோல்வியின் எதிர்ச்சொல் அல்ல….

வெற்றியும் தோல்வியும் எதிர் எதிர்த் துருவங்களும் அல்ல….

பிரித்தானிய முன்னாள் பிரதமர் Whinston Churchill இன் கூற்றுப்படி:

‘வாழ்வில் வெற்றி கண்ட பலர் தோல்வி என்ற தரிப்பிடங்கள் நிறைந்த ஓர் ஒற்றைப் பாதை வழியாக நடந்து சென்றே வெற்றி என்ற இலக்கை அடைந்திருக்கிறார்கள்’.

பிரபலமான ஐக்கிய அமெரிக்க தொழில் அதிபர் Thomas J. Watson அவர்களை வெற்றி என்ற பதத்திற்கான இரகசிய வழிமுறையைக் கூற முடியுமா என்று வினவினார்கள்.

‘வெற்றிக்கான இரகசிய வழிமுறை என்பது மிகவும் எளிமையானது. நாம் பல மடங்கு தோல்விகளை சந்திப்பதே வெற்றிக்கான பாதையை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நாம் சந்திக்கும் தோல்விகளில் மனம் துவண்டு எமது முயற்சியைக் கைவிடாமல் எமது தோல்விகளை எமது அனுபவப் பாடங்களாகக் கற்றுக் கொள்ளும் போது எமது வெற்றிக்கான பாதை எமக்குத் தெரிய வருகிறது’
என்று கூறுகிறார் பிரபலமான ஐக்கிய அமெரிக்கத் தொழில் அதிபர் Thomas J. Watson அவர்கள்.

முயற்சி என்ற கயிற்றைப் பற்றி ஏறிக்கொண்டு போகும் பொழுது வெற்றியும் தோல்வியும் பல சமயங்களில் வேறுபடுவது ஓர் நூலிழை இடைவெளியில் தான்..

உதாரணத்திற்கு ஒலிம்பிக் நூறு மீற்றர் ஒட்டப் போட்டியில் முதலாவதாக வருபவனுக்கும் இறுதியாக வருபவனுக்கும் இடையில் ஆகக் கூடிய பட்சம் ஓரிரு மீற்றர்கள் இடைவெளியே இருக்கக் கூடும்…

வாழ்வின் வெற்றியும் மகிழ்வும் பிறருக்கு பயனுற நிறைவுடன் வாழ்வதில் தங்கி இருக்கிறது.

சொல்லின் செல்வி, வைத்திய கலாநிதி ஜெயந்தசிறீ அவர்கள் ஒர் உரையில் குறிப்பிடுகின்றார்.

உங்களது பிள்ளைகளை வாழ்த்தும் போது அவர்கள் மகத்தான வெற்றிகளை அல்ல, மகத்தான தோல்விகளை சந்திக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் என்று…

காரணம் வெற்றிகள் உங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும்.

தோல்விகள் தான் உலகை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

வாழ்வு என்பது மகிழ்வாக வாழ்வதற்கே….

ஒட்டப்பந்தயத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதற்கு அல்ல…

ஒரு முறை கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகின்றார்.

‘நான் ஒரு கவிஞன். எனது தொழில் கவிதை எழுதுவது.

எனது மனநிறைவுக்கு நான் கவிதைகளை / திரைப்படப் பாடல்களை எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

இவற்றில் ஒரு சில பாடல்கள் சிறந்தது என்றும் வெற்றி பெற்றவை என்று எங்கோ இருக்கும் எவரோ ஒருவர் எதனையோ அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கிறார்.

எவரோ ஒருவர் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று தீர்மானித்ததற்காக எனது உழைப்பை கைவிட்டுவிட்டு தலைகால் தெரியாமல் குதித்து கூத்தாடவும், மறுநாள் எவரோ ஒருவர் நான் தோற்று விட்டதாகக் கூறும் போது மனம் உடைந்து போகவும் நான் ஒன்றும் மனநோயாளி அல்ல.

வேலையில்லாமல் மற்றவனின் வெற்றி தோல்விகளைப் பற்றி பேசுபவன் பேசிக் கொண்டே இருக்கட்டும் நான் எழுதிக் கொண்டே இருப்பேன்’ என்று கூறுகிறார் கவியரசு வைரமுத்து.

‘மாற்றம் ஒன்றே மாற்றம் அற்றது’

இந்த உலகம் தொடர்ச்சியாக மாற்றங்களின் ஊடாக பயணித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த மாற்றங்களிற்கு ஏற்ப காலத்திற்கு ஏற்ப எம்மையும் மாற்ற வேண்டிய நிர்ப்பத்தங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கிக் கொண்டே இருக்கிறோம்.

ஆக எமக்கான நிரந்தர பாதுகாப்பு வலையம் (Comfort zone) என்று எதுவும் இல்லை. எமது சுற்றுச் சூழல் மாற்றங்களின் சவால்களை எதிர்நோக்க நாமும் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறது. புதிய பாதைகளில் புதிய பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

Mark Zuckerberg famously said: ‘The biggest risk is not taking any risk’

Mark Zuckerberg என்ற பிரபலமான அமெரிக்க தொழிலதிபரின் கருத்துப்படி எமது வாழ்வின் ஆகக் கூடிய அபாயம் (Risk) என்பது நாம் அபாயம் (Risk) தரும் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது தான் என்று கூறுகின்றார்.

2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் பாட்டன் திருவள்ளுவன் கூறுவான்:

‘கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

எல்லோரும் நடக்கின்ற பாதை வழியால் நடந்து போகும் போது எல்லோரும் அடைகின்ற தரிப்பிடத்தையே நாங்கள் அடைவோம்.

புதிய பாதைகளைத் துணிவுடன் தெரிவு செய்து கடுமையான பாதைகளில் இடைவிடாது பயணிக்கும் போதே மற்றவர்கள் அடையாத புதிய இலக்கினை நாம் சென்றடைகின்றோம்.

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே தனிப்பட்ட வாழ்வை மகிழ்வாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவதற்கு இல்லை….

ஆனால் தமது வாழ்வில் தமக்கு ஆர்வமான தொழிலை தெரிந்தெடுத்து தமக்கென்ற ஒரு பாணியில் ஈடுபாட்டுடனும் மனத்திருப்தியுடனும் முயற்சி செய்த பலர் வரலாற்றில் வெற்றியாளர்களாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

I was raped at the age of 9″ – Oprah Winfrey

“I didn’t even complete my university education” – Bill Gates

“I struggled academically throughout elementary school” – Dr. Ben Carson

“I used to serve tea at a shop to support my football training” – Lionel Messi

“I used to sleep on the floor in friends’ rooms, returning Coke bottles for food, money, and getting weekly free meals at a local temple” – Steve Jobs

“My teachers used to call me a failure” – PM Tony Blair

“I was in prison for 27 years” – and still became president. Nelson Mandela

“I drove taxi to finance my university education” – Mike Adenuga

Though we pass through many difficulties in life, we should not give up because life is not about what you couldn’t do so far, it’s about what you can still do.

“Success is not final; failure is not fatal. It is the courage to continue that counts.” ~ Winston S. Churchill.

இறுதியாக, தோல்வி என்பது முடிவான ஒரு முடிவு அல்ல.

அது எமது முயற்சிகளை தொடர்வதற்கான ஒரு தூண்டுதல் சரியான பாதையில் அடுத்த எமது காலடியை வைப்பதற்கான ஒரு வெளிச்சம்.

அதே நேரம் வெற்றி என்பது ஒரு முடிவான தரிப்பிடம் அல்ல. அது ஒரு தொடர் பயணம். வெற்றியை தொடர்ச்சியான பேணுவதற்கு தொடர்சியாக கடின உழைப்பு தேவை ஆகின்றது.

செல்வன்

Related Articles

Leave a Reply

Back to top button