உலகம்செய்திகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – நிரபராதி என விடுவிக்கப்பட்ட சிறுவனால் களேபரம்!!

world

வீட்டில் இருந்த தானியங்கி துப்பாக்கியை எடுத்து வந்து, ஆர்பாட்டக்காரர்கள் மீது சுட்ட, இந்த 17 வயதான கெய்லி என்ற இளைஞரை, குற்றம் அற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கறுப்பின மக்கள் பெரும் ஆர்பாட்டத்தில் ஈடு பட ஆரம்பித்துள்ளார்கள். அமெரிக்காவில் பல இடங்களில் களோபர நிலை தோன்றியுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், ஜக்கொப் பிளேன் என்ற 29 வயது கறுப்பின இளைஞரை பொலிசார் சுட்டுக் கொன்றார்கள். அமெரிக்காவில் இன வெறிக்கு பெயர் போன மாநிலமான, விஸ் கான்சின் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனை அடுத்து கறுப்பின மக்கள் மிகவும் ஆக்ரோஷமான ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள். அந்த ஆர்பாட்டக்காரர்களை நோக்கி, இந்த சிறுவன் சுட்டதில் 2 பேர் பலியாகி ஒருவர் படுகாயம் அடைந்தார். பொலிசார் சிறுவனை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினார்க ள் .

சிறுவனோ தற்பாதுகாப்பிறாக தான் சுட்டதாக தொடர்ந்து கூறிவந்தான். இன் நிலையில் நேற்றைய தினம்(20) 7 பேர் அடங்கிய ஜூரிகள் குழு, இரு தரப்பு விவாதங்களையும் கேட்டு சிறுவன் குற்றமற்றவன் என்று கூறியுள்ளார்கள். இதனைக் கேட்ட சிறுவன் எழுந்து உடனே தனது வக்கீலை கட்டிப் பிடித்தான். இந்த புகைப்படங்கள் வெளியாகியதும், கறுப்பின மக்கள் தற்போது ஆவேசமடைந்துள்ளார்கள். மீண்டும் அந்த மாநிலத்தில் வெள்ளை இன நபர்களுக்கு சார்பாகவே தீர்ப்பும் வந்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை தான் எதிர்பார்கவில்லை என்று, ஜோ பைடன் தெரிவிதுள் ளார்.

இனி ஆயுதங்களை தொட்டால் 20 வருட சிறை தண்டனை கிடைக்கும் என்ற ஒத்திவைப்பு தண்டனையை கொடுத்து இருக்கலாம். ஆனால் ஒன்றுமோ நடக்காதது போல இந்த நீதிமன்றம் சிறுவனை விடுவித்து உள்ள விடையம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button