திருகோணமலை சேர்ந்த 3 வருடங்களும் 11 மாதங்களுமான தாரா என்ற சிறுமி அதிக ஞாபகத்திறன் மூலம சோழன் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வைத்து சனிக்கிழமை (12) அவர் இதனைப் படைத்துள்ளார்.
அவருடைய பெற்றோர் பிரேம்ராஜ் மற்றும் வைதேகி .தமது குழந்தை, தவழும் பருவத்தில் இருந்தே அதிக ஞாபகத் திறனுடன் இருப்பதைக் கண்டறிந்த தமது மகளுக்கு தொடர் பயிற்சியளித்ததன் விளைவாக தாரா, சோழன் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் வைத்து 2 முதல் 7 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகள், வரிசை அட்டவணையின் 50 கூறுகள், மனித உடல் உறுப்புகள் 6 இன் உட்பாகங்கள் போன்றவற்றை கூறிய அதேவேளை 100 சமூக ஊடகங்களின் சின்னங்களையும் பிழையின்றி அடையாளம் காட்டினார்.
இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது..
குறித்த சிறுமியைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
செய்தியாளர் – சமர்க்கனி.