இலங்கைசெய்திகள்

கால்வாயில் வீழ்ந்த காதலன் – உயிரிழந்த காதலி!!

Death


 கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில்  நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் கால்வாய் கரையில் நடந்து சென்றதாகவும், கால்வாயில் அதிக நீர் ஓட்டம் காரணமாக  இளைஞன் தவறி விழுந்ததாகவும்  அந்த நேரத்தில் காதலி அவரைக் காப்பாற்ற கை நீட்டியதால், இருவரும் கால்வாயில் விழுந்தனர் என் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மஹியங்கனை பொலிஸ் பயிற்சி பாடசாலையை சேர்ந்த ஒரு அதிகாரியும் அவரது மனைவியும் உடனடியாக கால்வாயில் குதித்து இளைஞனை காப்பாற்றியபோதும்  அவர்களால் அந்த இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின்  மாணவியே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

“நான் திருமணம் செய்துக் கொள்ளவிருந்த காதலியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

என்னை காப்பாற்ற முயற்சித்த போதே அவர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்”  என உயிர் பிழைத்த காதலன் தெரிவித்துள்ளார்..

Related Articles

Leave a Reply

Back to top button