யாழ்ப்பாண பல்கலையில் தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருநாள் நிகழ்வு பல்வேறு தடைகளையும் தாண்டி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (18) வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு விளக்கேற்ற வந்த நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை பல்கலையில் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை தீபங்களை ஏற்றியுள்ளனர்.
மேலும், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் வெளியில் நின்றமையை அவதானிக்கூடியதாக இருத்தது. இதேவேளை இராணுவ மோட்டார் வாகனங்களும் சென்றன. கடந்த வருடம் ஒரு மாணவன் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை தட்டிக்கேட்க மாணவர் ஒன்றிய தேர்தலையும் நடாத்தாது பல்கலை நிர்வாகம் கொரோனா பரவலை காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்து வருவதாக குழுமியிருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.