இன்றைய (17.10.2024 – வியாழக் கிழமை) பத்திரிகை முன்பக்கச் செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்!!
லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட, மற்றும் தாஜூதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
2.
புளோறிடா செல்லும் மனித மாதிரி எச்சங்கள்!!
மன்னார் – மனிதப்புதைகுழி எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்புமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
3.
இந்தியத்தூதுவரின் எச்சரிக்கை!!
கடந்கால தயக்கங்களைக் கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கான மனோநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் எனவும் இலங்கை – இந்திய நிலையான பங்காளித்துவ அவசியம் குறித்தும் இந்தியத்தூதுவர் சந்தோஷ்யா வலியுறுத்தியுள்ளார்.
4.
தற்காலிக ஓய்வு!!
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறமாட்டேன் எனவும் இது தற்காலிக ஓய்வு எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
5.
பெண்களைத் துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் கைது!!
இலங்கையில் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞனும், அவனது சிறிய தந்தையுமே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தியாளர் – சமர்க்கனி