இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய ( 08.09.2024 – ஞாயிற்றுக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில்!!

News

 1.

அனுர மன்னிப்பு கோர வேண்டும் – ரணில்!!

யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறுத்துவது போல பேசிய அனுர குமார திசாநாயக்க யாழ் மற்றும் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2.

சஜித்துக்கான வாக்குகள் புதிய விகாரைகளையே உருவாக்கும்!!

தமிழ் மக்கள், சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வடக்கு கிழக்கில் புதிய விகாரைகளை உருவாக்கும் என தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 

3.

வாக்குச் சீட்டைப் படமெடுத்த ஆசிரியர் கைது!! 

புதுக்குடியிருப்பு பகுதியில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர்  தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களித்த வாக்குச் சீட்டைப் படமெடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

4.

ரணிலுடன் இடம் பெற்ற முக்கிய சந்திப்பு!!

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், கடந்த பாராளுமன்ற தேரதல் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்று நேற்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளனர்.

5.

தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாக்களிக்குமாறு கோரிக்கை!!

தமிழ் மக்களின் இன்னல்கள் தீர்க்கப்படவேண்டும் என்கிற நோக்கில் தமிழ் கட்சிகள் மற்றும் மக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button